May 16, 2025 0:58:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடிவேலு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் வடிவேலு வீடு திரும்பினார்.

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்கிற படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது.

படப்பிடிப்பு முடிந்து டிசம்பர் 23 ஆம் திகதி வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

அதன்போது அவர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் வடிவேலுவுக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வந்தார்.

இந்நிலையில் வடிவேலு பூரண குணமடைந்து நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.