கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்கிற படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்றது.
படப்பிடிப்பு முடிந்து கடந்த 23 ஆம் திகதி வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
அதன்போது அவர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் வடிவேலுவுக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.