November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அயலான்’ திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரவிக்குமாா் இயக்கத்தில், ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகும் ‘அயலான்’ படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில் டேக் என்டொ்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா் வெங்கடேஷ் என்பவா் அயலான் திரைப்படத்துக்குத் தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தமது நிறுவனத்திடம் இருந்து, 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி ரூபா கடனாகப் பெற்றிருந்த நிலையில், தற்போது வட்டியோடு சோ்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால், அந்தப் பணத்தைத் திருப்பித் தரும் வரை, அயலான் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்ற போது, அயலான் திரைப்படத்தை 2022 ஜனவரி 3 ஆம் திகதி வரையில் வெளியிடுவதற்கு நீதிமன்றத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.