February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் செல்வனின் ஹிந்தி பிரவேசம்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்துவரும் விஜய் சேதுபதி, அடுத்த கட்டமாக ஹிந்தி சினிமாவுக்குள் காலடி எடுத்துவைக்கிறார்.

தனது நடிப்புத் திறமையினாலும் எளிமையான லுக்கினாலும்  வலம் வரும் மக்கள் செல்வனின் இந்த அதிரடி ஹிந்தி பிரவேசம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தமிழ் சினிமாவில் அடையாளம் கொடுத்த ‘மாநகரம்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதனை ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இதற்காக விக்ரந்த் மாசாய், சஞ்சய் மிஷ்ரா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இயக்குநர் சந்தோஷ் சிவன் இந்த படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்துக்கு விஜய் சேதுபதியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதற்கு விஜய் சேதுபதியும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும்  கூறப்படுகின்றது.

ஏற்கனவே கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ள தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களுக்கான  ஷூட்டிங்கை முடித்துவிட்டுத்தான் மீண்டும் தமிழுக்கு வருவார் விஜய் சேதுபதி என்கிறது சினிமா வட்டாரம்.

இப்போது விஜய் சேதுபதி கைவசம் இருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை 14 எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.