October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப்பொருள் விவகாரம்; நெருக்கடியில் நடிகை தீபிகா

தீபிகா படுகோனே

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலையைத் தொடர்ந்து பொலிவுட்டில் இயங்கி வரும் போதை கும்பலின் வலையமைப்பினை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

ஹிந்தித் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர் இந்த விசாரணையில் வெளிவந்தாலும், இதில் மோசமான நிலையில் இருப்பது நடிகை தீபிகா படுகோன் ஆவார்.

அத்துடன், தீபிகாவின் முகாமையாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் போதைப் பொருட்கள் கிடைத்ததுடன் அந்த முகாமையாளர் தலைமறைவானது தீபிகாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை தீபிகா படுகோனிடம் கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 5 மணிநேர விசாரணையில் தீபிகாவுக்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை.

விசாரணையின் முடிவில் பொலிஸார் அவரது அலைபேசியை கைப்பற்றிக்கொண்டனர்.அதனை தடய அறிவியல் அலுவகத்துக்கு அனுப்பி, அதிலிருந்து அழிக்கப்பட்ட செய்யப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் வீடியோக்களை மீட்டெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் முடிவில், தீபிகாவை அட்மினாகக் கொண்ட வாட்சப் குழு ஒன்று இயங்கிவந்தது தெரியவந்துள்ளது.

தீபிகாவின் மேனேஜரான கரிஷ்மா பிரகாஷும் தீபிகாவும் பரிமாறிய குறுந்தகவல்களில் போதைப் பொருட்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பான ஆதாரம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து  கரிஷ்மா மீதும் மும்பை பொலிஸார் கண்காணிப்பை பலப்படுத்தியதோடு அவரை விசாரணைக்கு அழைக்க தொடர்புகொண்டபோது தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இப்போதைக்கு கரிஷ்மா மீதான குற்றச்சாட்டுகளை வைத்து அவருக்கு பிடியாணை வெளியிட நீதிமன்றத்துக்குச் செல்லத் தயாராகிறது மும்பை பொலிஸ்.

அதேசமயம், தீபிகாவின் அலைபேசியில் எடுக்கப்பட்ட குறுந்தகவல் ஒவ்வொன்றையும் வைத்து, அதற்கும் இந்த போதைப் பொருள் கடத்தலுக்கும் இடையேயான தொடர்பிற்கான தகவல்களை சேர்த்து வருகிறது பொலிஸ்.

தங்களிடம் போதுமான ஆதாரங்கள் கிடைத்ததும், தீபிகாவை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகின்றது.

ஒருவேளை அவரது பதில்கள் திருப்தியளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் தடுப்பு விசாரணைக்கு கோரிக்கை விடுத்து,விசாரணையின் வேகத்தை முடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.