July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புஷ்பா என்கிற புஷ்பராஜ்…

செம்மரம் கடத்தும் கூலியாக வாழ்வைத் தொடங்கி டான் ஆக உயர்ந்து அங்கு வரும் பிரச்சினைகளை எப்படி சரி செய்கிறார் என்பதே கதை.

ரங்கஸ்தலம் வெற்றி படத்தை தந்த சுகுமார் இயக்கத்தில் தென் இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் ரஷ்மிகா, பகத் பாசில், ஒரு பாடலுக்கு சமந்தா என வரிசை கட்டிக் கொண்டு நட்சத்திர பட்டாளம் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவில் பின்னி எடுத்திருக்கிறார் மிரோஸ்லா கூபா.

நடிப்பில் அல்லு அர்ஜுன் முதல் இரண்டாம் பாதியில் வரும் அனைவரும் தங்கள் பங்குக்கு போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள் .

இனி வரும் வாரங்களில் இந்த படத்தை பற்றிய விவாதமே இணையங்களில் எங்கும் நிறைந்திருக்கும்.

ஊ சொல்றியா மாமா ஊ சொல்றியா பாடல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மிகப்பெரிய வெற்றி பெற்று சமந்தாவின் நடனத்தில் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வழக்கமாக தென்னிந்திய மொழிகளில் தென்படும் கேங்ஸ்டர் படத்தை போன்று இது இருந்தாலும் கூட அதை படமாக்கிய விதம் சலிப்பை தராமல் ரசிக்கவே வைக்கிறது.

வசனம், சண்டை காட்சிகள், காதல் கவர்ச்சியோடு கலந்து குத்து பாடல் என, ஒரு தென்னிந்திய மசாலா கலந்த ஆகச் சிறந்த பொழுதுபோக்கு படமாக இந்த புஷ்பா நூற்றுக்கு இருநூறு சதவீதம் என்டர்டைன்மென்ட் தந்திருக்கிறது என்றால் மிகை இல்லை.

தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம் என பல்வேறு மொழிகளில் புஷ்பா திரைப்படம் மிகப் பெரும் வசூலைக் குவித்திருக்கிறது.

புஷ்பா படம் வெளியாகிய இரு நாட்களுக்குள் வசூலில் 100 கோடியைத் தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திரையரங்குகளில் நிரம்பி வழியும் கூட்டம், நேர்மறை விமர்சனங்கள், மிகப் பெரிய வசூல் என புஷ்பா திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது.