October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுமாறி வீழ்ந்தாலும் மீண்டும் எழுவேன்; நடிகர் அஜித்குமாரின் வலிமை பட மேக்கிங் வீடியோ

சமீப காலமாக நடிகர் அஜித்குமாரின் வலிமை படக்குழுவினர் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை
உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வலிமை படத்திலிருந்து அண்மையில் அம்மாவின் அன்பு குறித்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ என ஒரு சில முக்கிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன .

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கின்றனர் .

பைக் ரேஸை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த மேக்கிங் வீடியோவை வைத்து பார்க்கும்போது தெரிகிறது.

ஆகவே நடிகர் அஜித் குமார் பைக் ரேஸ் பிரியர் என்பது உலகறிந்த உண்மை.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய முழு திறனையும் காண்பித்து இருப்பார் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று.

படத்தில் வரும் சண்டை காட்சிகள், மிகவும் ஆபத்தான முறையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என பார்க்கும் போதே மெய்சிலிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் தான் வலிமை.இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி அனைவரையும் பிரமிப்படைய வைத்துள்ளது.

படத்தின் பூஜை முதல் இறுதியாக பைக் ரேசிங் காட்சிகள் ,சண்டை காட்சிகள் என எவ்வாறு ரிஸ்க் எடுத்து படமாக்கப்பட்டுள்ளது என காண்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காட்சியிலும் நடிகர் அஜித் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளது இந்த மேக்கிங் வீடியோவில் காணமுடிகிறது.

இதனிடையே கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட சிரமம், மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா? இல்லையா? என்ற கேள்வி என அனைத்து தடைகளையும் தாண்டி அவர்கள் முகம் கொடுத்த சவால்களை பேசியுள்ளது இந்த வலிமை மேக்கிங் வீடியோ.

மீண்டும் படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போது உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் அப்டேட் கேட்டு சவால்களை ஏற்படுத்தியது என படக்குழு எதிர்கொண்டவற்றை சொல்லி இந்த மேக்கிங் வீடியோவில் நெகிழ வைத்துள்ளனர்.

தடுமாறி விழலாம்… ஆனால் மீண்டும் எழுவோம்… நாம் போர்க்களத்தில் இருந்து பின்வாங்கக்கூடாது… அதுவே போதும்…என்ற மகாத்மா காந்தியின் வரிகள் ஆங்கிலத்தில் அதில் இடம்பெற்றுள்ளது.

வீடியோவின் இறுதியில், நடிகர் அஜித்குமார் பைக் ரேஸிங் செய்யும் போது எதிர்பாராத விதமாய் விபத்துக்குள்ளாகுவதை காண்பித்துள்ளனர்.

அப்போது நடிகர் அஜித்குமார் மாஸாக மீண்டும் எழுந்து நடந்து வருவதைப் போன்ற அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

அப்போதுதான் அந்த மகாத்மா காந்தியின் வார்த்தைகள் காண்பிக்கப்படுகின்றன.வீழ்ந்த பின்பும் மீண்டெழுவோம் என சொல்லும் விதமாக நடிகர் அஜித்குமாரின் இந்த அசாத்திய உழைப்பை பாராட்டும் விதமாகவும் இந்த வலிமை மேக்கிங் வீடியோ அமைந்துள்ளது.

வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகிறது.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அம்மா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வலிமை படத்தின் மேக்கிங் காட்சிகள் படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஆகவே இந்த பொங்கல் ரேஸிலிருந்து எத்தனை முன்னணி நடிகர்களின் படங்கள் பின்வாங்க போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.