
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் அவரின் பிறந்தநாள் எளிமையான முறையில் மனைவி, மகள்கள், பேரக் குழந்தைகள், உறவினர்களுடன் வீட்டில் கொண்டாடப்பட்டுள்ளது.
அந்த புகைப்படங்களை சௌந்தர்யா விசாகன் அவரின் ‘ஹூட்’ செயலியில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்.
அவரின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சச்சின் டெண்டுல்கார், திரை பிரபலங்களும் மற்றும் அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் , மனைவி லதா , மகள்கள், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா , அவரது கணவர் விசாகன், மகன் வேத், தனுஷ் மகன் லிங்கா, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சூழ கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.