
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சென்ற வாரம் 17வது நபராக விஜே அர்ச்சனா களமிறக்கப்பட்டது நாமறிந்ததே.
அதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகியான சுசித்ரா விரைவில் வர இருக்கிறார் என இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இந்த நிலையில் ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த சுசித்ரா நேற்று செய்திருக்கும் செயல் ஹோட்டலில் இருந்தவர்களை மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த சுசித்ரா நேற்று இரவு 11 மணிக்கு ‘என்னை கொலை செய்ய வராங்க.. ரூம் கதவ யாரோ வேகமா தட்டுறாங்க’ என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாராம்.
மேலும் ஹோட்டலின் வரவேற்பு தளத்தில் சில மணி நேரங்கள் பித்து பிடித்ததுபோல் அமர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் சுசித்ரா. இதற்குப் பிறகு அந்த தொலைக்காட்சி தரப்பினர் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.
இதனால் சுசித்ரா அங்கு வேலை செய்வோர் மற்றும் தங்கியிருந்தோர் என அனைவரின் தூக்கத்தையும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகக் கெடுத்துள்ளார்.
எனவே இந்த செய்தியை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள் பலர் ‘ஏற்கனவே உள்ள இருக்கவங்க பத்தாதுன்னு புதுசா இத வேற அனுப்புறிங்களாடா’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.