January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டுவிட்டரில் சாதனை படைத்த விஜய்யின் ‘மாஸ்டர்’

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் டுவிட்டரில் சாதனை படைத்திருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான  ‘மாஸ்டர்’  படத்தில் தளபதி விஜய், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடிகர்கள் நாசர், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் வருடம்தோறும் டுவிட்டர் தளத்தில் அதிகமாக ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி சாதனை படைத்த திரைப்படம் எது என்பது குறித்து வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான அதிக ஹேஷ்டேகுகளை பயன்படுத்திய திரைப்படமாக தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் சாதனை படைத்திருக்கிறது.

இதனை டுவிட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதற்கு அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் வலிமை பட ஹாஷ்டேக் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

மூன்றாவது இடத்தில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படம் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இதற்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் நடிகர் சூர்யாவின் ‘ஜெய்பீம்’ பட ஹேஷ்டேக் இடம்பிடித்திருக்கிறது.

ஐந்தாவது இடத்தில் தெலுங்கு படமான பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் பட சாதனையை தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாஸ்டர் படம் விளங்குகிறது .

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.