
ஹிந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் கத்ரீனா கைஃப்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைஃப் அந்த துறையைச் சார்ந்த விக்கி கௌஷல் என்ற நடிகரை திருமணம் முடித்துள்ளார்.
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.
பல கோடி கணக்கில் செலவு செய்து, நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷலின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
தன்னைவிட 5 வயது குறைந்த நடிகர் விக்கி கௌஷலை நடிகை கத்ரீனா திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .
இந்த பிரம்மாண்ட திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் 120 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது
திருமணம் முடிந்த கையோடு தமது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் கத்ரினா கைஃப் .
அதில் பதிவிட்டுள்ள கத்ரினா கைஃப் அனைவருக்கும் தனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்திருக்கிறார்.ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆசீர்வாதத்தோடு இந்த புது பயணத்தை தொடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.