April 30, 2025 17:44:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கெட்டப்பை மாற்றினாலும் கரக்டரை மாற்றாத சிம்பு

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் பெயர்தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

அதற்குக் காரணம் தன்னுடைய முழு எடையையும் குறைத்து விட்டு தற்போது வல்லவன், மன்மதன் காலகட்டங்களில் இருந்த சிம்புவைப் போன்று செம ஸ்மார்ட்டாக மாறி விட்டதுதான்.

தற்போது மாநாடு, சுசீந்திரன் படம் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் சிம்பு.
இதனால் மீண்டும் சிம்பு சினிமாவின் பாதைக்கு திரும்பி விட்டதாக நினைத்து பல தயாரிப்பாளர்கள் அவரை தேடிச் சென்று அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளனர்.

கெட்டப்பை மாற்றியதால் கரக்டரையும் மாற்றி விட்டார் என தப்பாக நினைத்துவிட்டார்கள் போல.

தனக்கு அட்வான்ஸ் கொடுத்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை படத்திற்கு திகதி கொடுக்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாராம் சிம்பு.
ஜீவாவை வைத்து மோசமான நஷ்டத்தை சந்தித்த கொரில்லா பட தயாரிப்பாளர் சிம்புவை சந்தித்து அட்வான்ஸ் கொடுத்ததாகவும் தற்போது திகதி கொடுக்காமல் சிம்பு அலைய விடுவதால் அவர் மீது குற்றம் சாட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.