இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைசி விவசாயி.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை பார்த்த பலரும் கடைசி விவசாயி படத்தை பாராட்டி உள்ளனர்.
ஏனெனில் விவசாயிகள் படும் துன்பங்கள், ட்ரெய்லரை பார்க்கும் போது வேதனையுடன் கலந்த நகைச்சுவையாக எல்லோர் மனங்களிலும் ஆழப்பதிகிறது.
பன்னாட்டு உரக் கம்பெனிகளும், பயிர் விதை கம்பெனிகளும் எப்படி பாரம்பரிய விவசாயத்தை அழித்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தந்து கடைசிவரை ஒரு விவசாயி பன்னாட்டு விதை கம்பெனிகளை சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது என இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது.
அதேபோல் பில்கேட்ஸ், ஜிஎஸ்டி பற்றி ஒரு வசனம் வருவதும் அதை கூறியவுடன் கிண்டலாக கலகலவென்று சிரிப்பதுமாக ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கிறது.
வயதான முதியவர் ஒருவர் தக்காளி விதையை வாங்கும் அந்த காட்சியில் ,கடைக்காரர் வெள்ளைக்காரர் கண்டுபிடிச்சது தான் இந்த தக்காளி. விதையை போட்டா விதையே இல்லாம தக்காளி வரும் எனக் கூறுகிறார்.
அதற்கு அந்த விவசாயி மனம் வெதும்பி இந்த விதையை கண்டுபிடித்த மனிதனுக்கு ஒரு ஆண் மகன் பிறந்து அவன் விதைப்பைகள் இல்லாமல் இருந்தால் அப்போதுதான் அவனுக்கு அந்த கஷ்டம் புரியும் என்று கூறுகிறார்.
இது கேட்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும் கூட ஒரு விவசாயியின் வேதனையை தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
மரபணு மாற்றப்பட்ட விதைகளால் விவசாயிகள் படும் துயரங்களை படம் பிடித்துக் காட்டுகிறது கடைசி விவசாயி படம்.
கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி ,யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒரு கிராம பின்னணியில் விவசாயிகள், ஊர் மக்கள் என வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என இப்படம் கூறுகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி சற்று வித்தியாசமான கேரக்டரில், முற்றும் முழுதாக ஒரு கிராமத்து நபராகவே இருப்பதை நாம் காண முடிகிறது .
அதேபோல் இப்படத்தில் யோகிபாபு ஒரு யானை வளர்க்கும் நபராக காட்டப்படுகிறார். அதில் நான் வாங்கின யானை, யானையின் பெயர் கல்யாணி எனவும் அதற்கு வயது 18 எனவும் அவர் கூறுவது ட்ரெய்லர் காட்சிகளில் இருக்கிறது.
இவ்வாறாக விவசாயிகளின் கஷ்டங்களையும் படம் பிடித்துக் காட்டியிருக்கும் கடைசி விவசாயி காமெடியாக கதை நகர்த்தி இருப்பதும் சிறப்பே.
டிரைலரின் இறுதியில் வயதான ஒருவர், விஜய் சேதுபதியிடம் தமிழ்நாட்டை இன்னைக்கு யாரு ஆட்சி பண்ணுறா என கேட்கும்போது, வானத்தை நோக்கி கையை காட்டும் விஜய்சேதுபதி, முருகன்…. ,முருகன் தானே ஆட்சி பண்ணுறான் ….,எப்பவுமே அவன் தானே …என கூறி முடிகிறது ட்ரைலர்.
கடைசி விவசாயி, விவசாயிகளின் வாழ்வியலையும், துன்பியல் போராட்டங்களையும், அவர்களின் வழிபாட்டு முறைகளையும் அழகாக எடுத்து காட்டுகிறது .
https://www.youtube.com/watch?v=snBnNbVXeEM