நடிகர் சூர்யா தயாரித்து நடித்து வெளியிட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியானது முதல் தமிழகத்தில் பலத்த சர்ச்சையை சந்தித்து வந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை புண்படுத்தும் வகையில் இந்த படத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்ததது.
இதற்கு ஜெய்பீம் பட தரப்பிலிருந்து மறுப்பும் வருத்தமும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் ஞானவேல் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜெய்பீமில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என ஜெய்பீம் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
ஜெய்பீமில் இடம்பெற்ற காலண்டர், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என அறியவில்லை .
1995ஆம் ஆண்டை பிரதிபலிப்பதே அதன் நோக்கம், ஒரு சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது நோக்கமும் அல்ல என அவர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நடிகர் சூர்யா நோக்கமாக கொண்டிருந்ததாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
”இயக்குனராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த படத்தினால் மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என த.செ.ஞானவேல் மன்னிப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .