July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரணவ் மோகன்லாலின் ‘ஹிருதயம்’ டீசரில் இடம் பிடித்த தல அஜித்

மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்துள்ள ஹிருதயம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த ஹிருதயம் திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மகன் பிரணவ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.இதனை சமூக வலைத் தளங்களில் ரசிகர்கள் வரவேற்று இருக்கிறார்கள்.

பிரணவ் மோகன்லால் 2018 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆதி என்ற படத்தில் நடித்தார்.முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து தற்போது இடையில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும், இந்த ஹிருதயம் திரைப்படம் குறித்து மலையாள ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தின் டீசரில் வரும் பிரணவ் அச்சு அசலாக தனது தந்தை மோகன்லாலை போலவே இருப்பதாக ரசிகர்கள் விமர்சனத்தில் பாராட்டியுள்ளார்கள்.

நடை, உடை, பாவனை, பேச்சு என அனைத்துமே தந்தை மோகன்லாலை ஒத்துள்ளது படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது.

தற்போது பிரணவ் மோகன்லால் நடித்து வரும் ஹிருதயம் படத்தில் தல அஜித் குமாரின் ஓவியம் இடம் பெற்றுள்ளதும், தல போல வருமா என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளதும் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலையாளப் படத்தின் டீசரில் அஜித் ஓவியம் இடம்பெற்றுள்ளதால் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வினீத் சீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் – கல்யாணி பிரியதர்ஷன் , தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹிருதயம்’ வரும் 2022 ஜனவரி 21 ஆம் திகதி வெளியாகிறது.

ஏற்கனவே, இப்படத்தில் இருந்து வெளியிடப்பட்ட ‘தர்ஷனா’ பாடல் இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட பாடலாக அமைந்துள்ளது.

இளம் பருவத்தினர் கொண்டாடும் ஒரு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது டீசர் மூலமாக அறிய முடிகிறது.

கல்லூரி காதல் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் டீசரில், கல்லூரி சுவற்றில் அஜித் ஓவியத்துடன் ‘தல போல வருமா’பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

மலையாள சினிமாவில் அஜித் ஓவியமும்,அஜித் பாடலின் வரிகளும் இடம்பெற்றிருப்பதால் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

இப்படத்தின் இயக்குநர் வினீத் சீனிவாசன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.