June 4, 2025 23:45:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தளபதி விஜயின் ’66’ படத்திற்கு நடனம் அமைக்கும் பிரபு தேவா

பொதுவாகவே தளபதி விஜயின் படம் என்றாலே பாடலுக்கும், நடனத்திற்கும் குறைவே இருக்காது.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய், டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்

இந்தப் படம் முடிந்த கையோடு தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் 66’ பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு நடிகர் பிரபு தேவா நடனம் அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு ரசிகர்களை கவர்வதற்காகவே நடிகரும், இயக்குனரும் ,நடன ஆசிரியருமான பிரபு தேவாவை வைத்து தளபதி விஜயின் திரைப்படத்திற்கு தனித்துவமான நடனம் அமைக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறார்.

பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் கண்கவரும் நடனம் ஆடும் நாயகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களுக்குள்ளே அதிகளவு போட்டியும் காணப்படும்.

தெலுங்கு கதாநாயகர்களின் நடனத்துக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

தமிழில் நடிகர் விஜய்க்கு எவ்வாறு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ, அதேபோல் தெலுங்கு நட்சத்திரங்களின் நடனத்திற்காக ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் .

தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், விஜய் தேவரகொண்டா, சிரஞ்சீவி என அனைத்து முன்னணி நடிகர்களுமே நடனத்தில் கைதேர்ந்தவர்கள்.

இவர்களுக்குப் போட்டியாக நடனத்தை மிஞ்சும் வகையில் நடன காட்சிகளை தரமானதாக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறார்.

அந்த வகையில் தெலுங்கில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு அங்குள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நடனம் அமைக்க பிரபுதேவா மாஸ்டர் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘விஜய் 66’ படத்திற்கு பிரபு தேவா இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் முதன் முறையாக இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் என்பதால் அங்குள்ள ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற விதத்தில் நடனத்தை கொடுக்குமாறு விஜய் பிரபு தேவாவிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

விஜய் 66 திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘விஜய் 66’ படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.