
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு விட்டார்.
தற்போது மார்க்கெட் இல்லாததால் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக உள்ளார்.
என்னதான் வெப்சீரிஸ் போன்றவற்றில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
கொரோனா காரணமாக மிகவும் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து திருமணத்தை முடிக்க முடிவெடுத்துள்ள காஜல் அகர்வால், ஒரே ஒருவருக்கு மட்டும் அழைப்பு கொடுத்துள்ளாராம்.
அவர் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மகனான ஸ்ரீனிவாச ராவ் என்பவர்.சீதை என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் இருவரும் காதலிக்கவில்லை என அப்போதே கூறிவிட்டனர். இதற்கிடையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைத்தது அவரது இந்நாள் காதலருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளதாம்.