January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜெய் பீம்” திரைப்படத்திற்கு உலக நாயகன் பாராட்டு!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ‘ஜெய் பீம்‘ படத்திற்கு உலக நாயகன் கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான ‘ஜெய் பீம்‘ திரைப்படம் தீபாவளியையொட்டி நவம்பர் 2 ஆம் திகதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த படம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் சூர்யா, ஜோதிகா மற்றும்  படக்குழுவினருக்கும் அவர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘கூட்டத்தின் ஒருத்தன்’ இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ‘ஜெய் பீம்‘ படத்தை நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ளார்.

அடித்தட்டு மக்கள் எவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள், அவர்களுக்கான நீதியின் குரல் எவ்வாறு நசுக்கப்படுகிறது, அந்த மக்களுக்கு ஆதரவாக போராடும் ஒரு வழக்கறிஞராக சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தமிழகத்தின் முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, இருளர் இன மக்களுக்காக வாதாடிய வழக்கினையே ‘ஜெய் பீம்’ படமாக உருவாகி உள்ளது.