July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த டாக்டர்!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ,நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் திரையரங்க மொத்த வசூல் 100 கோடி ரூபாயை கடந்து இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திற்குப் பிறகு டாக்டர் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது அதேபோல் நல்ல வசூலையும் குவித்து வருகிறது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் அண்மையில் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு 100% அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் டாக்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் ‘ரெமோ’தான் அதிக வசூல் செய்த படமாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த ரெமோ படத்தின் வசூல் சாதனையை கடந்திருக்கிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.

டாக்டர்’ படத்தின் திரையரங்க மொத்த வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாக, கே.ஜே.ஆர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பிளாக்பஸ்டர் படமான டாக்டர் , கடந்த 25 நாட்களும் ரசிகர்களை கைதட்டி , உற்சாகப்படுத்தி இருக்குமென கே ஜே ஆர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது உங்களுக்கும் எங்களுக்குமான வெற்றி என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்திற்கு இடையே, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருப்பதால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.