July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளை வெளியாகும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அதன்மூலம் தன் தனித்தன்மையை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் ‘பீச்சாங்கை’ படத்தின் நாயகன் ஆர். எஸ். கார்த்திக்.

இதனையடுத்து இவர் நடிக்கும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபேஷன் ஸ்டுடியோ தயாரித்திருக்கிறது.

இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘நோ காஸ்ட் நோ ரிலிஜியன்’ என்ற வாசகமே இளைஞர்கள் மத்தியில் இந்தப் படத்தைப் பற்றிய ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதைவிடவும் சுவாரசியமான விஷயம் இந்தப் படத்தில் நடித்த கதாநாயகன், கதாநாயகிகள் மற்றும் ஏனைய கதாபாத்திரங்கள் அனைவரும் திரையரங்கு வாயிலில் நின்று படத்துக்கான விளம்பர பணியில் ஈடுபட்டது.

அனைத்து மத அடையாளங்களை அணிந்தபடியும் அனைத்து மதங்களுக்கும் உரிய வாத்தியக் கருவிகளை சுமந்து கொண்டும் (உண்மையான வாத்தியக் கருவிகள்) சற்றேறக்குறைய 60 கிலோ எடையை சுமந்தபடி திரையரங்குகள், வழிபாட்டு தளங்கள், பார்க் மற்றும் பீச் என வலம் வந்தார், இந்த படத்தின் நாயகனான கார்த்திக்.

இப்படியான புதுமையான விளம்பரத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவனிக்க வைத்த இந்த படம் நாளை ‘சோனி லைவ்’ இல் வெளிவரவுள்ளது.

இந்த படத்தின் சீரக பிரியாணி பாடலின் மூலமாக இசையமைப்பாளர் குணா பாலசுப்ரமணியன் தனி முத்திரையைப் பதித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவை அருண் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் கையாண்டுள்ளதுடன் எடிட்டிங்கை பிரகாஷும் கலையை டிஜேவும் அழகாக கையாண்டு இருக்கிறார்கள்.

ஒரு நாயகன்,நான்கு கதாநாயகிகள் மிகப்பெரிய நடிகர் பட்டாளம் என அனைத்தையும் அழகாக படத்தை இயக்கியுள்ளார் பிரபு ஜெயராமன்.

அசோக் இயக்கிய பீச்சாங்கை மூலமாக அறிமுகமான கார்த்திக்கிற்கு ‘என்னங்க சார் உங்க சட்டம்,’ இரண்டாவது படமாகும்.

அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இத்திரைப்படம் விமர்சனங்களுக்கும் தவறாது என்பது குறிப்பிடத்தக்கது.