July 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமலா பாலின் ’கடவேர்’ போஸ்டர் வெளியீடு

நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகி ‘கடவேர்’ படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிணங்களுக்கு இடையே அமர்ந்து அமலா பால், உணவு உண்ணுவது போல் இந்த ‘கடவேர்’ போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள இயக்குநர்களான அனூப் பனிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் இயக்கும் இத்திரைப்படம் மார்ச் 25ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இதில் அமலா பால், டாக்டர் பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது .

அமலாபால் தனது முழு திறன் செயற்பாடுகளைக் கொண்டு ஒரு வழக்கை தீர்க்க எவ்வாறு உதவி புரிகிறார் என்பதை மையமாக வைத்து இந்த கடவேர் படக்கதை நகர்வதாக தெரிகிறது.

தமிழ் திரையுலகில் நடிகர்கள் தற்போது தயாரிப்பாளராக மாறி வருவது வழக்கமாகிவிட்டது .

அந்த வகையில் அமலாபாலும் இந்த கடவேர் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். இத்திரைப்படத்தை அவரே தயாரித்து நடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாகிவரும் தடயவியல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் இதுதான் என்று கூறப்படுகிறது.

‘கடவேர்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு, தயாரிப்பாளராகிய அமலாபாலுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

சினிமா துறையில் தனது அனுபவம் பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை அமலா பால்,

சினிமா துறையில் 12 வருடங்கள் , 144 மாதங்கள் , 4,380 நாட்களாக நடிகையாக இருந்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தன்னைச் செம்மைபடுத்துவதற்கு 12 வருடங்கள் தேவைப்பட்டது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அனுபவங்களை வைத்து தான் தற்போது புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அமலா பால் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

தடயவியல் துறை சம்பந்தப்பட்ட இந்த த்ரில்லர் படத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அமலாபாலுடன் அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அமலாபாலுக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனை ஏற்படுத்திய ஆடை படத்தைப் போன்று, இந்தப் படமும் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.