நடிகர் அஜித்குமாரின் வளர்ச்சியை எதுவும் தடுக்க முடியாது என பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
‘வலிமை’ படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித்குமார் சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை வரை பைக்கிலேயே பயணித்தார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாக வந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தொடர்ச்சியாக பைக்கில் நீண்ட தூரம் பயணிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கியுள்ளார் அஜித்.
இந்நிலையில் அஜித்குமாரின் இந்தப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள போனி கபூர் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் கனவு நிறைவேறுவதிலிருந்து அவரை எதுவும் தடுக்க முடியாது என போனி கபூர் டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
அஜித்குமாரின் ஆர்வம் மற்றும் அவரின் திறமையானது என்றுமே வளர்ந்து செல்லும் என போனி கபூர் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். உலக மக்களால் விரும்பப்படும் நபராக அஜித்குமார் இருப்பதாக அவர் புகழ்ந்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’.
இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வெளியிட்டார்.
இந்த படத்தில்தான் முதன் முதலாக அஜித்குமார், போனி கபூர் ஆகியோர் இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து ‘வலிமை’ படத்திலும் இதே கூட்டணி இணைந்து பணியாற்றியது.அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள வலிமை படத்தின் போஸ்டர்கள், டீஸர் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது படத்திலும் நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர் உடன் இணைந்து, இயக்குனர் வினோத் கூட்டணி பணிபுரிய தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
மூன்று படங்கள் தொடர்ச்சியாக ஒரே தயாரிப்பாளருக்கு அஜித் நடித்து கொடுப்பது இதுவே முதல் முறை எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் அஜித் ,போனி கபூர் இருவருக்கும் இடையேயான நட்பு வலுப்பெற்றுள்ளது.
Nothing can stop him from living his passion and making his each dream come true. Universally Loved. #AjithKumar pic.twitter.com/vcynxZdkZ8
— Boney Kapoor (@BoneyKapoor) October 23, 2021