July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

’பிக்பாஸ்’ புகழ் முகேன் ராவின் ‘வேலன்’ டீசர்

‘பிக்பாஸ்’ புகழ் முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி’ என்ற திருக்குறள் வசனத்துடன் தொடங்கும் வேலன் பட டீஸர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

முகேன் ராவின் பிறந்தநாளை ஒட்டி வேலன் திரைப்பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலன் திரைப்படம் இளைஞர்களுக்கான ஒரு மெசேஜ் உடன் வெளிவர இருக்கிறது என்பது டீஸரை பார்க்கும்போது புரிகிறது.

இந்த திரைப்படம் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவை பாசப்பிணைப்பை பிரதிபலிக்கும் கதையாக இருக்கலாம் என தோன்றுகிறது.

வேலன் திரைப்படம் முக்கியமாக இதுவும் ஒரு ஊரில் நடக்கும் குடும்ப கதையாகவே எடுக்கப்பட்டிருக்கிறது.

கோயில், கொண்டாட்டம் ,ஆட்டம், பாட்டம் என ஒரு கலர்ஃபுல்லான ஒரு திரைப்படமாக வேலன் படத்தை நாம் காணலாம்.

கொரொனா காலகட்டத்துக்குப் பின்பு இவ்வாறான கலர்ஃபுல்லான குடும்ப பாங்கான கதைகள் மக்களை மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றும்

பிக் பாஸ் டைட்டில் வின்னரான முகேன் ராவ் முதல் படம் நடித்திருந்த போதிலும் , இரண்டாவது படமான நடித்துள்ள வேலன் திரைப்படத்தின் டீஸர் முதல் முதலில் வெளியிடப்பட்டிருக்கிறது.

முகேன் ராவின் திரைப்படத்தினை பார்ப்பதற்கு இந்தியா வாழ் மக்கள் மட்டுமல்லாமல் , உலகத் தமிழ் மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் .

அந்த வகையில் வேலன் திரைப்படம் முகேன் ராவுக்கு தமிழ்சினிமாவில் நல்லதொரு அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என நாம் நம்பலாம்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் கவின் இயக்கியுள்ளார். இதில் நகைச்சுவை நடிகர் சூரி மலையாளியாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

டீசரில் இடைக்கிடையே சூரியும், முகேன் ராவும் வந்து செல்லும் காட்சிகள் அனைவரது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார்.

இயக்குனர் சீனு ராமசாமியின் ‘இடிமுழக்கம்’ படத்தை தயாரிக்கும் கலைமகன் முபாரக் வேலன் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

டீசரில், ‘நம்மலாள ஒருத்தவங்க மனசு நெறஞ்சி நிக்கனுமே தவிர கண் கலங்கி நிக்கக்கூடாது’ என்று பிரபு பேசும் வசனம் தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மெசேஜ் ஆக அமைந்திருக்கிறது.

டீசரின் இறுதியில் முகேன் ராவ் பேசும் ,ஒரு தரமான சம்பவத்தை ரெடி பண்ணி வச்சிருக்கேன் உள்ள வந்து பாரு… என சூரியிடம் கூறும் வசனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

படத்தில் காதல் ,காமெடி ,சண்டை என குடும்ப உணர்வுகளுக்கு மத்தியில் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் சண்டைக்காட்சிகளில் முகேன் ராவ் கலக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

வேலன் டீசரை பார்த்தவர்களின் அடுத்த எதிர்பார்ப்பு எப்போது படம் திரைக்கு வரும் என்பதே. பொறுத்திருந்து பார்க்கலாம்