April 30, 2025 17:32:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தளபதி 65 படத்திலிருந்து முருகதாஸ் விலகியதன் பின்னணி வெளியானது

தளபதி 65 படத்திலிருந்து ஏ.ஆர். முருகதாஸ் விலகியுள்ளமை தமிழ் சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

பிகிலை தொடர்ந்து முருகதாஸ்- விஜய் தளபதி 65 இல் இணையும் செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்காக அவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், தீடீர் என முருகதாஸ் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விலகலுக்கு அரசியல்தான் காரணம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

முருகதாஸ் தெரிவித்த கதை தமிழக அரசியலை மையமாக கொண்டது எனவும் இந்த கதை குறித்து தனக்கு சில சந்தேகங்கள் இருந்ததால் முருகதாஸ் தரப்பினரிடம் இதனை உறுதிசெய்யுமாறு விஜய் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னர் தயாரிப்பாளர்களிடம் முருகதாஸ் கதையை தெரிவித்துள்ளார்.அந்த கதை தமிழக அரசியலை அடிப்படையாக கொண்டது என்பதால் அதில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அதில் மாற்றங்களை மேற்கொள்ள தயாரில்லை என முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் என தயாரிப்பாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்தே முருகதாஸ் விலகியுள்ளார்.