
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய்பீம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இதேவேளை ‘ஜெய் பீம்’ படம் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார்.
தா.சே.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் சூர்யவின் 39 ஆவது படமாகும்.
இதில் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் ஆகியோர் நடித்துள்ளதுடன் படத்திற்கு ஷீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
மேலும், சூர்யா படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளமை படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
நீதிபதி சந்த்ரு என்பவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விரைவில் படத்தின் பாடல் மற்றும் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.