January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காட்டாறு… அவனுக்கு கரையும் கிடையாது தடையும் கிடையாது; மிரட்டும் அண்ணாத்த பட டீசர்

கிராமத்தான குணமாத்தானே பாத்துருக்க.. கோவப்பட்டு பாத்ததில்லையே?…

காட்டாறு, அவனுக்கு கரையும் கிடையாது தடையும் கிடையாது…

என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உரித்தான பஞ்ச் வசனங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது அண்ணாத்த பட டீசர் .

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

ரஜினிக்கே உரித்தான ஸ்டைலில்,பஞ்ச் வசனங்களும், அதிரவைக்கும் இசையும் என ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அண்ணாத்த பட டீசர் .

அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அண்ணாத்த பட டீஸர் வெளியாகிய சில மணி நேரங்களில் ,25 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

ஒரு கிராமப்புற சூழலை மையமாக வைத்து அண்ணாத்த படம் நகர்வதை நாம் டீசர் வழியாக அறியமுடிகிறது.

கிராமத்தில் கோயில் கொண்டாட்டம் ,வயல் நிலம், மண்வாசனை என முன்னணி நட்சத்திரங்களுடன் தீபாவளிக்கு களைகட்ட காத்திருக்கிறது அண்ணாத்த திரைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் இளமையாகவும் அவருக்கே உரித்தான நடை, உடை, பாவனை என மாஸ் லுக்கில் படம் முழுவதும் வலம் வருவதை நாம் டீசர் வாயிலாக காணமுடிகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் ஏனைய படங்களை போல இந்த படத்திலும் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம்.

மிரட்டும் அண்ணாத்த பட டீஸரை பார்க்கும்போது தீபாவளிக்கு சிறப்பு விருந்து காத்திருக்கிறது என்றே தெரிகிறது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டனர் .