June 16, 2025 14:26:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இளமையான தோற்றத்தில் ரஜினிகாந்த் – அண்ணாத்த படத்தின் ‘சாரல் காற்றே’ பாடல் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்து இரண்டு பாடல்களை வெளியிட்டு அசத்தியுள்ளது படக்குழு.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய அண்ணாத்த அண்ணாத்த… பாடல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சாரல் சாரல் காற்றே… என்ற மெலடி பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து வரும் காதல் பாடலாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

கிராமத்து பின்னணி, வயல் நிலம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இளமையான தோற்றத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் இந்தப் பாடலில்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பாடலில் நயன்தாரா மிகவும் அழகாக காண்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, புடவையில் கலக்கி உள்ளார்.

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் அண்ணாத்த படத்தில் ரஜினியின் இளமை தோற்றம் மீண்டும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

பாடலில், வயல் வரம்பில் இருவரும் வரும் காட்சியில், ரஜினிகாந்தை இளமையாக காட்டும் பொருட்டு துள்ளிக்குதித்து ஆனந்த நடைபோடும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.இதற்கு சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.

சாரல் சாரல் காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே…

சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ
நனைகிறதே என் ஆயுள் ரேகையே…

படபடவென கைகள் ரெண்டும் சீராட்ட
விழுகிறதே நம் தோளில் மாலையே…

பச்சை மனது பால்நிறம்
அன்பில் சிவந்து போகுதே…

சற்றே இருண்ட வானிலை
உன்னழகை கண்டதுமே மின்னொளி பெறுதே…

என வரும் பாடல் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த பாடல் கேட்பதற்கு ரொமாண்டிக்காக இருப்பதால் இளைஞர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில், ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த ‘சாரல் சாரல் காற்றே’ பாடல் வெளியாகிய சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கு பார்வையாளர்களை தன்வசமாக்கியுள்ளது.