April 30, 2025 23:14:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 தோற்றங்களில் மிரட்டும் பிரபு தேவாவின் ‘பஹீரா’ பட டிரெய்லர்!

நடன ஆசிரியரும், நடிகருமான பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹீரா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பஹீரா.

சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு விதமான கெட்டப்புகளில், பல தோற்றங்களில் கலக்கியுள்ளார் நடிகர் பிரபு தேவா.

முழுக்க முழுக்க ஒரு சைக்கோ த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளதை ட்ரெய்லர் வாயிலாக தெரிகிறது.

இதேவேளை, திரைப்படம் குறித்து பேசியுள்ள நடிகர் பிரபு தேவா,

‘தான் பெண் வேடம் உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட தோற்றங்களில் இப்படத்தில் வருவது தன்னுடைய திரை வாழ்க்கையில் புது அனுபவமாகவே இருப்பதாக’ தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், படத்தின் இறுதியில் நடிகரும் இயக்குநருமான சீமான் பொது மேடைகளில் பேசும் ஒரு வசனம் வைக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபு தேவா 20 தோற்றங்களில் பட்டையைக் கிளப்பியுள்ளார்.இந்த ‘பஹீரா’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம்.