June 16, 2025 10:43:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

12 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் வில்லன் நடிகர்

கில்லி முதல் வில்லு வரை தளபதி விஜயுடன் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டானவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கில்லி படத்தில் வில்லன் நடிகராக கலக்கிய பிரகாஷ்ராஜின் நடிப்பு தற்போதும் பேசப்படுகின்றது.

இதன்பின்னர் இறுதியாக விஜய்யின் வில்லு திரைப்படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார் .

2009 ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்துக்குப் பிறகு விஜய் – பிரகாஷ்ராஜ் இருவருமே இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில், இயக்குநர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் ‘தளபதி 66’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளார்.

தற்போது அந்தப் படத்தின் பூஜை மட்டும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.