நடிகர் கவுண்டமணி தனது உடல்நிலை குறித்து பொய்யான செய்தியை வெளியிட்ட யூடியுப் சனலிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று காலை யூடியுப் சனல் ஒன்று நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.
கவுண்டமணியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அந்த யூடியுப்சனல் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த திரையுலகத்தினர் இது குறித்து தன்னிடம் விசாரித்த பின்னரே தனக்கு இவ்வாறான செய்தி வெளியானமை தெரியவந்தது என கவுண்டமணி தெரிவித்துள்ளார்.
நடிகர் கவுண்டமணி தனது உடல்நிலை குறித்து பொய்யான செய்தியை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறிப்பிட்ட யூடியுப் சனல் பரப்பிய பொய்யான செய்தியை கேட்டு திரையுலகத்தினர் கவுண்டமணியை தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளனர். அவர் நலமாக உள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மன அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கவுண்டமணியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.