
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுள்ளதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் பெயரில் கட்சி தொடங்கிய விவகாரத்தில், தன்னுடைய புகைப்படத்தையும், பெயரையும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள நடிகர் விஜய் தரப்பினர், எஸ்.ஏ. சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் மாத்திரம் கலைக்கப்பட்டுள்ளது எனவும், நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தளபதி விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த வழக்கை நீதிபதிகள் அக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.