February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்புவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கி வரும் பெயர் வைக்கப்படாத திரைப்படத்திலும் வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் மீண்டும் இணைந்த சிம்பு இன்று முதல்முறையாக தன்னுடைய படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அதில் வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் தான் நடித்து வரும் 46வது திரைப்படத்தின் பர்ஸ்ட் சைட் மற்றும் மோஷன் போஸ்டர் விஜயதசமி தினத்தன்று அதாவது ஒக்டோபர் 26 ஆம் திகதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் சிம்பு கையில் கிரிக்கெட் பட் வைத்துள்ளார் என்பதால் இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு முன்னர் கபடி உள்ளிட்ட விளையாட்டு குறித்த திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இம்முறை கிரிக்கெட் களத்தில் களமிறங்குகிறார் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.