April 30, 2025 17:44:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஜித்தின் சவால்;மனம்திறந்த யுவன்

அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்திற்கு இசையமைப்பது குறித்து யுவன் சங்கர்ராஜா சமீபத்தில் அளித்த செவ்வியில் சுவாரஸ்யமான தகவலொன்றை வெளியிட்டிருந்தார்.

‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு இசை அமைக்கும் போதே அஜித் தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பில்லா, பில்லா-2, மங்காத்தா என பலவற்றுக்கு பின்னணி இசைக்கு கிட்டாரைப் பயன்படுத்தியதால் ’வலிமை’ படத்தில் கிட்டார் இல்லாமல் பின்னணி இசை அமைக்க முயற்சி செய்யுங்கள்’எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அவருடைய வார்த்தையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, கிட்டார் பயன்படுத்தாமல் ’வலிமை’ படத்தில் ஒரு பின்னணி இசையை அமைத்துள்ளேன்.மேலும் இதுவரை அந்த படத்தின் மூன்று பாடல்கள் முடிந்துவிட்டது. ஒரு சின்ன பின்னணி இசையும் முடிந்துவிட்டது என யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.