July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொங்கலுக்கு வெளியாகும் நடிகர் அஜித்குமாரின் வலிமை

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படத்தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 23  ‘வலிமை’ படத்திலிருந்து சிறிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

பொங்கல் வெளியீடு என்பதால் சில மாதங்கள் கழித்தே டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என தகவல்கள் வெளிவந்தன.

தற்போது அதனை மறுத்து பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்துடன் தன்னுடைய வலிமை படத்தை வெளியிட வேண்டாம் என அஜித் கூறியதாக தெரிகிறது.

இதன் காரணமாகவே வலிமை படத்தின் வெளியீடு பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ,எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் வலிமை படத்தில் நடித்திருக்கிறார் .

கடந்த 2019 ஆம் ஆண்டு வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து அஜித் குமாரின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

இந்தப் படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் திகதி வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அந்த திகதியில் வெளியிட வேண்டாமென அஜித் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் ஏற்கனவே தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.இதனையடுத்தே வலிமை திரைப்படத்தை அன்றைய தினம் வெளியிட வேண்டாம் என அஜித் குமார் வலியுறுத்தியிருக்கிறார்.

முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின.

இதனால் இருவரின் ரசிகர்களும் படத்தை பார்த்துவிட்டு கடுமையான வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர்.

இதனை அடுத்தே படத்தை பொங்கலுக்கு வெளியிடுமாறு நடிகர் அஜித் கூறியிருக்கிறார்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 100 நாட்களுக்கு மேல் இருப்பதால் படத்தின் டீசர், டிரைலர் போன்றவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்த வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.