October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யோகி பாபுவின் ‘பேய் மாமா’ செப்டம்பர் 24 இல் வெளியீடு 

நடிகர் யோகி பாபு நடித்துள்ள ‘பேய் மாமா’ படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகிய யோகிபாபு தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். நகைச்சுவை படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருவது தெரிகிறது.

பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள பேய் மாமா படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார் .

தற்போது முன்னணி கதாநாயகர்களின் பீஸ்ட்’, ‘வலிமை’ போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்கிறார் யோகி பாபு.

அவர் நடித்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமானது தான் மண்டேலா. இத்திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் ஏராளமான வசூலையும் குவித்தது.

இந்நிலையில்,யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ படத்தின் வெளியீட்டு திகதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

யோகி பாபுவுடன் எம்.எஸ் பாஸ்கர்,மொட்ட ராஜேந்திரன், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.பல நகைச்சுவை நடிகர்கள் நடித்திருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

நீண்ட நாட்களாக வெளியீட்டுக்கு தயாராய் இருக்கும் ‘பேய் மாமா’ படம் செப்டம்பர் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இந்தப் பேய் மாமா திரைப்படம் யோகி பாபுவின் ரசிகர்களை மட்டுமல்லாது, சிறுவர்களையும் கவர்ந்திழுக்கும் என நம்பப்படுகிறது.