November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் குறித்து மனம் திறந்த இசைஞானி இளையராஜா

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தில் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் குறித்து மனம் திறந்த இசைஞானி இளையராஜா.

காலத்தால் அழியாத பல பாடல்களை நமக்குத் தந்தவர் தான் இசைஞானி இளையராஜா. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் உள்ள பாடல் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல்.

பழைய கால பாடலான இது தற்போது நடிகர் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.இப்பாடல் தற்போது யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

“சிங்கீதம் சீனிவாசராவும் கமல் சாரும் இப்பாடல் கம்போசிங்கிற்காக வந்து அமர்ந்தார்கள்.வாலி அண்ணனும் இருந்தார்.

நான் இப்பாடலை ‘டட்டாட்ட டட்டாட்ட டட்டாட்ட டடடாட்ட’ என்றேன் என இசைஞானி இளையராஜா அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்‌

தொடர்ந்து பேசிய இளையராஜா,

‘என்னாயா இப்படி போடுற.இந்த மாதிரி சந்தம் எல்லாம் கொடுத்தா எப்படிய்யா எழுதறது?” என்று கேட்டார் வாலி அண்ணன்.’ இது ஏற்கனவே எழுதினதுதாண்ணே’ என்றேன்.

‘அப்படியா யாருய்யா எழுதினது’ என்று கேட்டார்.’ வள்ளுவர் எழுதிட்டுப் போயிருக்கார் என்று கூறி, ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’ என்று பாடிக்காட்டி இதுதான் சந்தம் என்றேன்.

அதன்பிறகு தான் வாலி அண்ணன் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’என்று எழுதினார் என இந்தப் பாடல் உருவான விதம் குறித்தும் பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா .

இந்தப் பாடலை இளையராஜாவின் மகனான யுவன் சங்கர்ராஜா தான் டிக்கிலோனா படத்துக்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.

90 களில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் சூப்பர் ஹிட் அடித்த பாடல் தான் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்.

தற்போதுவரை இளையராஜாவின் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

இந்நிலையில், இந்த பாடல் தற்போது சந்தானத்தின் புதிய திரைப்படமான டிக்கிலோனாவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடல் எவ்வாறு உருவானது என்பது குறித்து மனம் ‌ திறந்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

திருக்குறளை அடிப்படையாக வைத்தே இந்த பெயர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல் உருவாக்கப்பட்டதாக இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மைக்கேல் மதன காமராஜன்.

90 களின் பாடல் வரிசையில் இன்றளவும் புதிய படங்களில் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் ஏராளம்.

90 களில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்த பாடலை மீண்டும் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் யுவன் சங்கர்ராஜா.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில், நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் ஊர்வசி, குஷ்பூ, மற்றும் நாகேஷ் என பலர் நடித்துள்ளனர்.

மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இளையராஜா இசையில் வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டடித்தன.

இந்தப்பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பகிர்ந்து கொள்ளும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.