January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளியாகும் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்திற்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து

நாளை (17) வெளிவரவுள்ள ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லோஸ்லியா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பிரண்ட்ஷிப்.

ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிடப்படவுள்ளது.

முன்னதாக இத்திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகும் என பேசப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது சக தோழரான ஹர்பஜன் சிங்கிற்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோரது வரவிருக்கும் படங்களான பீஸ்ட், வலிமை , அண்ணாத்த போன்றவற்றின் பெயரை குறிப்பிட்டு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்திருப்பது வைரலாகியுள்ளது.

‘பஜ்ஜி பா… என் அண்ணாத்த… ‘பிரண்ட்ஷிப்’ ட்ரெய்லர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு. படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது,’பிரண்ட்ஷிப்’ படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க’ என சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டிருக்கிறார்.

இத்திரைப்படம் பிக்பாஸ் புகழ் இலங்கையைச் சேர்ந்த லோஸ்லியாவின் முதல் திரைப்படம் என்பதுடன், அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.