July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புல்லட்டில் கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; அண்ணாத்த மோஷன் போஸ்டர் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாட தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அண்ணாத்த படத்தின் அப்டேட் ரஜினி ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய மனநிறைவை கொடுத்திருக்கும்.

இமானின் மிரட்டும் இசையில் புல்லட்டில் கெத்தாக வரும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .

செம்ம ஸ்டைலாக,கெத்தாக தனக்குரிய பாணியில் புல்லட்டில் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட போஸ்டர் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்பார்’ படத்திற்கு பிறகு ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ‍சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த அண்ணாத்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,குஷ்பு,மீனா,பிரகாஷ் ராஜ்,சூரி,சதீஷ் என இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.

அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் திகதி திரையிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் சென்னை,ஹைதராபாத் ,மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.அண்ணாத்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.

ரஜினி ரசிகர்கள் அனைவரும் அடுத்த தீபாவளி எப்போது வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.