January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியலுக்கு பதிலாக திரையில் நடிப்போம்; வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.முதலில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நீண்ட இடைவெளியின் பின்னர் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.சுராஜ் ,வடிவேலு இணையும் படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

அப்போது மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியலுக்கு பதிலாக திரையில் நடிப்போம் என கூறியுள்ளார்.மக்கள் இப்போது நீங்க நடிங்க வடிவேலு என்று சொல்லிவிட்டார்கள்.அதனால் அரசியல் வேண்டாம் என கூறியுள்ளார் வடிவேலு.

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த போது, தன்னை பார்த்தவுடன் சீக்கிரம் படம் நடிங்க வடிவேலு என்று கூறியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் வடிவேலு.

கண்டிப்பாக உங்க ஆசீர்வாதம் இருக்கும் வரை எனக்கு ஒரு குறையும் இல்லண்ணே என்று தான் கூறியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

முதல்வரைப் பார்த்ததிலிருந்தே தனக்கு நல்ல நேரம் தொடங்கி இருக்கிறது என வடிவேலு கூறியுள்ளார்.

உங்களுக்கு ரெக்கார்ட் போடவில்லை,ரெக்கார்ட் என்று சொன்னது வாய்மொழியில் தான் உங்களை நடிக்கவிடாமல் செய்துள்ளார்கள் என தயாரிப்பாளர் சங்கம் கூறியதாக நடிகர் வடிவேலு தெரிவித்திருக்கிறார் .

அதற்குள்ளாக லைக்கா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன் அவர்கள் வந்து பிரச்சினையை முடித்து விட்டார் என நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தற்போது நடிப்பதற்கு நல்ல பல கதைகள் வந்திருப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.

லாரன்ஸ்,அர்ஜுன்,ஆகியோர் படங்களுக்கு பேசியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.2 படங்களில் மட்டுமே கதையின் நாயகனாக நடித்துவிட்டு, அப்புறம் முழுவதுமாக காமெடி நடிகராகவே இருக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, தனக்கு எண்டே கிடையாது என கூறியுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் 5,6 படங்களில் நடித்ததாகவும் அதைக் கூட தான் சமாளித்ததாகவும் ஆனால்,இடைப்பட்ட காலத்தில் கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடியாக வைத்தார்கள். தப்பித்துவிட்டேன் என தனக்குரிய பாணியில் கூறியுள்ளார் வடிவேலு.

படப்பிடிப்பிற்கு தான் வரவில்லை எனக் கூறி பொய் குற்றம் சுமத்திய தாகவும் தன்னால் ‍இழப்புக்கள் ஏதுமில்லை எனவும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.

100 கோடி ரூபாய் கூட இழப்பு என்பார்கள்.எனக்காக லண்டனிலிருந்து சுபாஷ்கரன் வந்து பேசி இந்தப் படத்தை அவர் எடுத்துக் கொண்டார் என அவர் கூறியுள்ளார்.

மீண்டும் இயக்குனர் ஷங்கருடன் இணைவீர்களா என கேட்டபோது,ஆத்தாடி அந்த ஏரியா பக்கமே போகமாட்டேன்,அந்த சாவகாசம் நமக்கு வேண்டாம் ஐயா என வடிவேலு தெரிவித்திருக்கிறார்.