July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

மிக நீண்ட நாட்களாக வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா மற்றும் சில பிரச்சினை காரணமாக ‘டாக்டர்’ படம் வெளியிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது.

ஓ.டி.டியில் வெளியாகும் என தகவல் வந்த நிலையில் அதனை மறுத்துள்ளதுடன் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் டாக்டர் படத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் 50வீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.இதனால் ஒக்டோபர் மாதத்தில் டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மன இறுக்கத்தில் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஆயுத பூஜையையொட்டி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

டாக்டர் படம் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.