July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராய்லட்சுமி நடிப்பில் உருவான ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டிரெய்லர்

நடிகை ராய்லட்சுமி நடிப்பில் ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் உருவாகியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ‘எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

காஞ்சனா படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்து, கருப்பு பேரழகா பாடலில் நடனமாடி புகழ் பெற்ற ராய்லட்சுமி முதன் முறையாக தமிழில் சிண்ட்ரெல்லா பட பெயருடன் சிண்ட்ரெல்லாவாக நடித்துள்ளார்.

சிண்ட்ரெல்லாவின் அழகான முழு நீள ஆடைக்காக ஆசைப்படும் ஒரு பெண்ணின் அமானுஷ்ய கதையும், த்ரில்லர் கலந்த ஒரு பயமூட்டும் படமாக இருக்கும் என ட்ரெய்லர் மூலம் அறிய முடிகிறது.

பேய் கதைகளை விரும்புவர்களுக்கும், அமானுஷ்யமான விடயங்களை தேடுபவர்களுக்கும் இந்த சிண்ட்ரெல்லா படம் மிகவும் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ஏராளமான பேய் படங்கள் வந்து இருந்தாலும், இது சற்று வித்தியாசமான முறையில் ஆங்கில திரைப்பட பாணியைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு படமாக இருக்கலாம்.

நீல நிற ஆடையில் வலம் வரும் சிண்ட்ரெல்லா கதையில் நடைபெறும் அமானுஷ்ய நிகழ்வுகள் அதனைத் தாண்டிய சம்பவங்களும் திகிலை ஏற்படுத்துகிறது.

இந்தப் படத்தில் ராய்லட்சுமி மூன்று வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். 2005ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமான ராய் லட்சுமி, 15 ஆண்டுகளில் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.

ஆனாலும் சினிமாவில் அவரால் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை, இந்தப் படத்தின் முதன் முறையாக அவர் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

செப்டம்பர் 24ஆம் திகதி படம் வெளியாகும் என்பதுடன் விரைவில் வெளியாக உள்ள சிண்ட்ரெல்லா படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.