June 15, 2025 11:08:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாஜ்மஹாலில் நடைபெறும் ‘டான்’ படப்பிடிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் டான்.

கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது உலக அதிசயங்களுள் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி் இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.‘டான்’ படத்தை வரும் டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது .

நடிகர் சிவகார்த்திகேயன் உடன் டாக்டர் படத்தில் இணைந்து நடித்தவர் பிரியங்கா அருள்மோகன்.அதனைத் தொடர்ந்து தற்போது டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் பிரியங்கா அருள்மோகன்.

முன்னதாக பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் ’டான்’ படக்குழுவினருடன் தாஜ்மஹாலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.