January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்!

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, ‘விருமன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தினை இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.

அதற்கமைய இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியின் புகைப்படத்துடன் விருமன் படத்தின் பஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் நடிகர் ஷங்கரின் மகள் அதிதி, பாவாடை தாவணியுடன் வரும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைத் தளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிதியின் பட போஸ்டரை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் ‘2D Entertainment’ நிறுவனம்  தொடர்ந்து வித்தியாசமான சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

இதையடுத்து இந்த நிறுவனம் தனது அடுத்த சிறந்த படைப்பாக ‘விருமன்’ என்று தலைப்பிடப்பட்ட பிரமாண்ட புதிய படத்தை தயாரிக்கிறது.

அதிக வசூல் சாதனை படைத்த ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.

நடிகர் கார்த்தியை கிராமத்து இளைஞராக குறைந்த அளவு சில படங்களிலேயே நாம் பார்த்திருக்க முடியும்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் குடும்ப உறவுகளின் பெருமையைச் சொல்லும் படமாக கிராமத்து பாணியில் உருவான கொம்பன் படத்தையடுத்து தற்போது அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது விருமன் படத்திற்காக.

கொம்பன் படத்தில் நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளதுடன், இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.

இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.

இதனால் கார்த்திக்கின் ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

முதல் முறையாக தனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைக்கிறார் இயக்குநர் முத்தையா. செப்டம்பர் 18-ஆம் திகதி விருமன் படப்பிடிப்பு பணிகள் தேனியில் தொடங்குகிறது.