கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் புகழ் லொஸ்லியா ஆகியோர் நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரண்ட்ஷிப் திரைப்படம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
பிரண்ட்ஷிப் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.
இருந்தபோதிலும் தற்போது திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் 17 ஆம் திகதி முதன்முதலில் பிரண்ட்ஷிப் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடவிருக்கிறார்கள்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்,வெப் சீரிஸ்,முக்கிய வேடம் என தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.இதனையடுத்து அவர் முதன்முதலில் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் பிரண்ட்ஷிப்.
அதேபோல் இலங்கை சேர்ந்த லொஸ்லியாவிற்கும் இதுதான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
இப்படத்தில் அர்ஜுன், நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ளனர்.
இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன்சிங்,
“நாங்க வரோம்!!! உங்க ஆதரவோட உங்கள மகிழ்விக்கணும் அப்பிடிங்கிற எண்ணத்தோட”செப்டம்பர் 17″ நம்ம படம் உலகம் முழுக்க தியேட்டர் ரிலீஸ்!! சூப்பர்ஸ்டார்,தல,தளபதி படம் மாதிரி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்கும்”
என குறிப்பிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங் மற்றும் லொஸ்லியாவிற்கு இது முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இப்படம் உருவாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.