July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஷால் 32 – படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது!

நடிகர் விஷால் நடிக்கும் 32வது படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சமீபகாலமாக விஷாலின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு எடுபடவில்லை, இருந்தபோதிலும் இந்த விஷால் 32 புதிய படமானது ,விஷால் இதுவரை நடித்த படங்களில் மாறுபட்டதாக இருக்கும் எனவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்த படம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து விஷால் 32 திரைப்படத்தை தயாரிக்கின்றனர் .

இந்த திரைப்படத்திற்கான பூஜை விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 29-ஆம் திகதி நடைபெற்றது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகும் இந்த விஷால் 32 திரைப்படமானது விஷாலை தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.