July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக்பாஸ் புகழ் லோஸ்லியா – தர்ஷன் நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ டீசர் வெளியானது

பிக்பாஸ் புகழ் லோஸ்லியா மற்றும் தர்ஷன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தை கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்துள்ளார்.

அதேநேரம் இந்தப்படத்தில் கே.எஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதுடன் கதாநாயகி, கதாநாயகனாக இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் புகழ் தர்ஷன், லோஸ்லியா ஆகியோர்  நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் யோகிபாபு, மாரியப்பன், ‘ப்ராங் ஸ்டார்’ ராகுல், மனோபாலா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநனர்களாக பணியாற்றிய சபரி, சரவணன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்ததுடன் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததுடன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து, நடித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

மேலும் இத்திரைப்படம் ஒரு ரோபோ நாள் முழுதும் வீட்டில், வெளியில் செய்யும் வேலைகள், ரோபோவை ஊர்மக்கள் எப்படி பார்க்கின்றனர், ஊருக்குள் அதைப் பற்றி எவ்வாறு பேசுகின்றனர், போன்ற கருத்துக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என டீசரை பார்க்கும் போது புரிகிறது.

முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக இந்த ‘கூகுள் கூட்டம் இருப்பதை டீசர் வழியாக அறியமுடிகிறது.

இலங்கையைச் சேர்ந்த தர்சன் மற்றும் லோஸ்லியா இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.