January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்பு நடிக்கவிருக்கும் ”கொரோனா குமார்” திரைப்படம்!

காஷ்மோரா, ஜூங்கா, அன்பிற்கினியால் போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கைவசம் பல படங்கள் இருக்கின்றன.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது என தற்போது தகவல் கூறுகின்றனர்.

ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்பட்ட ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குமாறு ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோளை வைத்து வந்தனர்.

அந்த வகையில் இயக்குநர் கோகுல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக ”கொரோனா குமார்” என்ற கதையை லாக்டவுனில் எழுதியுள்ளார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.