January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அறிமுக இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த 2017- ஆம் ஆண்டு வெளியான ‘பீச்சாங்கை’ என்ற படத்தின் மூலம், அறிமுகமானவர் தான் ஆர்.எஸ் கார்த்தி.

அந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் குண பாலசுப்ராமணியன் என்பவர் இசையமைத்து வருகிறார்.

தயாரிப்பாளர் சதன்.எஸ் மற்றும் ஜி.ஜெயராம் இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் செகண்ட் லுக் போஸ்டரில் அர்ச்சகராக ஒரு சிறிய பைக்கில் அம்பேத்கர் படம் ஒட்டியவாறு வருவதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

போஸ்டரில் பல கருவிகளுடன் கலப்பின உடையணிந்த இசைக்கலைஞர் வேடத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி இருக்கிறார்.

இந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

புதிய அறிமுக இயக்குநர், பெரிதாக அறிமுகமில்லாத நடிகர்கள் என, படத்தின் பெயரை வைத்து பார்க்கும்போது சமூகத்திற்கான விழிப்புணர்வு படமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

அத்தோடு சமூகத்தில் உள்ள மூட கட்டமைப்புகளைத் தாண்டி ஒவ்வொருவரும் தனக்கான துறையில் கால் பதிப்பதற்காக முகம்கொடுக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்.