July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் கன்னட நடிகை

கௌதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாரு இந்த புது ஹீரோயின் என்ற கேள்வி எல்லோர் இடத்திலும் பரவலாக எழுந்திருக்கிறது.வாயில் நுழையாத பெயர்,தமிழுக்கு அறிமுகமாகிறார் இவர்.

தமிழில் என்னதான் முன்னணி நட்சத்திரங்கள் இருந்தாலும் புதுப் புது நடிகைகளை இறக்குமதி செய்வதில் தமிழ் சினிமா மும்முரம் காட்டுகிறது.

மொடலிங் துறையைச் சேர்ந்த கயாடு லோகர் கடந்த ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பத்தோம்பதாம் நூட்டுண்டு’என்ற மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார் இவர்.மலையாளப் படத்தில் நடித்ததாலோ என்னவோ தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் கயாடு லோகர் .

மஹாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர் தான் இந்த கயாடு லோகர்.தற்போது தமிழ் சினிமாவுக்குள் நுழையும் இவர்,சிம்புவுக்கு ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.தற்போது முன்னணி நடிகைகள்,கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புது வரவான கயாடு லோகர் தமிழ் சினிமாவில் நின்று நிலைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிம்புவின் 47-வது படமான இது,எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகிறது.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

முற்று முழுதாக ஒரு கிராமப் பின்னணியில் மாறுபட்ட விதத்தில், ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் திருச்செந்தூரில் தொடங்கியது.அத்துடன் தற்போது திருச்செந்தூரில் படப்பிடிப்பில் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்பு மற்றும் நடிகை ராதிகா இன்னும் பலர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.