July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படத்திற்கு டைகர் விருது

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படத்திற்கு டைகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

நயன்தாரா,விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானது திரைப்படம் கூழாங்கல்.

இதனை அடுத்து சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட டைகர் விருதுடன் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஆகியோர் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனரான வினோத் ராஜ் கூழாங்கல் படத்தை இயக்கி உள்ளார்.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கூழாங்கல் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.இப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட கூழாங்கல் படத்திற்கு டைகர் விருது கிடைத்ததையடுத்து சினிமா பிரபலங்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.